• Fri. Nov 13th, 2026

உசிலம்பட்டியில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான கால் பந்தாட்டம்..,

ByP.Thangapandi

Nov 13, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான கால் பந்தாட்டம் இறுதிப் போட்டி நடைபெற்றது.,

இதில் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான கால் பந்தாட்டம் போட்டியில் டிநோபிலி, சென்மேரிஸ், டிவிஎஸ் சுந்தரம், டிவிஎஸ் லட்சுமி, பிகேஎன் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 14 பள்ளிகளிலிருந்து அணிகள் கலந்து கொண்டனர்.,

இந்த போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார்.,
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் இணைந்து துவக்கி வைத்தனர்.,

இதில் இறுதிச் சுற்றில் மதுரையைச் சேர்ந்த டிநோபிலி, சென்மேரிஸ் ஆகிய இரு பள்ளியின் அணிகள் பங்கேற்ற நிலையில் டிநோபிலி அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்று மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.,

இதில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.,