மதுரை நாகனாகுளம் லேக் வாக்கர்ஸ் கிளப் சார்பில் தீபாவளியை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் உறுப்பினர்களுக்கு இனிப்புகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்பட்டன.

இனிப்புகளை வாக்கர்ஸ் கிளப் பொருளாளர் பழனிச்சாமி மற்றும் தினசரி நாட்காட்டியை பிரிமியர் சைக்கிள் மார்ட் உரிமையாளர் ஹாஜி.மீராஜான் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் வாக்கர்ஸ் கிளப் தலைவர் கைலாசம், செயலாளர் ஜவஹர், மாரியப்பன், ஷேக்நபி, காளிமுத்து, அபுதாஹிர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
