தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் நான்காவது மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் அங்கு பணி புரிகின்ற அனைத்து நபர்களுக்கும் பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கங்காரனை குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு சார்பாக சங்க நிர்வாகிகள் இனைந்து 5 வது வருடமாக தீபாவளி பண்டிகை நலத்திட்ட உதவிகள் வழஙகும் நிகழ்ச்சி நடைபெற்றது,

இதில் 300 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, 4 வகை காய்கறிகள் மளிகை தொகுப்பு,புடவை,பேண்ட், சர்ட், மற்றும் இனிப்புகளை நலச்சங்க தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் மஹேந்திர பூபதி வழங்கி கெளரவித்தார்,

பின்பு பேசிய சமூக ஆர்வலர் மஹேந்திர பூபதி தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழஙகுவதற்க்கு நலசஙகம் முயற்ச்சி செய்யும் என்று தெரிவித்தார்.
