புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி செயல் முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் புதுக்கோட்டை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் விபத்தில்லா தீபாவளி செயல் முறை விளக்கப் பயிற்சி சங்கத் தலைவர் S.அப்துல் ரகுமான் தலைமையில் அரசு உயர் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் H.மீனாட்சி சுந்தரம் வரவேற்றார் .

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜா செய்திருந்தார் ரோட்டரி பிரார்த்தனையை புதுகை வெற்றி ரோட்டரி சங்க தலைவர் முனைவர் A.சோமசுந்தரம் வாசித்தார். நிகழ்ச்சியில்
பட்டதாரி ஆசிரியர் N.உமா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் AMS.இப்ராஹிம் பாபு, பொருளாளர் C.பிரசாத், உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்கள் .

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் T.இமானுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர்கள் செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் T.தயாளன், M.பாலமுருகன், SR.சண்முகம் ,
V.சேகர், R.சரவணன் M. நமநாதன் SM.அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்க செயலாளர் (பொ) R.சங்கர் நன்றி கூறினார்.
