• Tue. Nov 3rd, 2026

சீமான் நிறைய நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்-அமைச்சர் வன்னியரசு பேட்டி..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2026

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட சங்கரலிங்காபுரம் இருப்பு மெய்யனுத்தம்பட்டியில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் சுமார் 2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டிடம், ஆய்வு கூடம், சுகாதார வளாகத்தை சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் இணைந்து ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர்.,

தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு.,

முதல்வர் சுற்றுப்பயணம் இடைத்தேர்தலை முன்னிட்டு தான் இந்த சுற்றுப்பயணம் என வைக்கும் குற்றச்சாட்டு, எதிர்கட்சிகள் அப்படி தான் சொல்லுவார்கள்., முதல்வர் 234 தொகுதியும் எனது தொகுதி தான் என சட்டப்பேரவையிலேயே அறிவித்தார்.,

குறிப்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவித்த போது கூட எதிர்கட்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என சொல்லவில்லை அனைவருக்கும் தான் என அறிவித்தார்.,

அதனால் இது போன்ற குற்றச்சாட்டுகள் எதிர்ப்பாக மட்டுமே அமையுமே தவிர ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டாக இருக்காது என்பதை தான் பார்க்கிறேன்.,

பட்டினப்பாக்கத்தில் விமான நிலையம் இங்கு தான் கட்ட போகிறோம் என சொல்லவில்லை, மக்களின் கருத்தை அறிந்து, அவர்களின் மனநிலையை அறிந்து தான் கட்டுவோம் என அமைச்சர்கள் தெளிவு படுத்தியுள்ளனர் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.,

நல்லது யார் செய்தாலும் ஒன்றும் தவறு இல்லை, ஜனநாயகத்தை ஏற்று கொண்ட நாடு, புரட்சியாளர் அம்பேத்கர் இந்த இந்தியாவை கட்டமைத்துள்ளார்.,

அதனால் தனுஷ் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி துவங்கலாம், மக்கள் அதை முடிவு செய்வார்கள், மக்கள் தான் எஜமானர்கள்.,

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே அமலாக்கத்துறையை சட்டப்படி எதிர்கொண்டவர் தான் அதே போல இதையும் எதிர்கொள்வார்.,

கடந்த திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டது ஆனால் நிலத்தை காணவில்லை., வடிவேலு படத்தை போல ரசீது இருக்கு கிணத்தை காணம் என்பதை போல., பட்டா வழங்கப்பட்டு நிலத்தை வழங்கவில்லை.,

ஆனால் இன்று காலை கூட இந்த ஆட்சியில் 112 பேருக்கு பட்டா கொடுத்துள்ளோம் என்றால் 112 பேருக்கான பட்டாவிற்கான இடத்தையும் சொல்லி தான் கொடுத்துள்ளோம்., கடந்த காலங்களில் நடைபெற்ற தவறு இனிமேல் நடக்காது.,

முதல்வரிடம் சட்டப்பேரவையில் பேசும் போது கூட முதல்வர் பட்டா இல்லாத நிலையே இருக்க கூடாது என சொல்லியுள்ளார், அதன் அடிப்படையில் நான் பொறுப்பு அமைச்சராக சுமார் 2 ஆயிரம் பட்டாக்களை கொடுத்துள்ளேன்.,

பட்டா வழங்கப்படாலும் அந்த இடத்தில் வீட்டுமனை கட்ட வெற்றி மனை திட்டத்தை அறிவித்து, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட தொகையை விட கூடுதலாக தொகையை 5 லட்சமாக அறிவித்துள்ளார், மக்களுக்கான அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.,

சீமான் நிறைய நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார், ஆகா கூகோ என்று N அதில் ஒன்று தான் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்