• Tue. Nov 3rd, 2026

வாடிப்பட்டி அருகேபழுதாகி நின்ற லாரி மீது தனியார் பால் நிறுவன வேன் மோதி விபத்து..!

ByKalamegam Viswanathan

Nov 3, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் முரளி. தனியார் பால் நிறுவன டிரைவரான இவர் தயிர் பாக்கெட்டுகள் ஏற்றிய லோடு வேனை தாராபுரத்திலிருந்து வாடிப்பட்டி அருகே உள்ள நகரி பகுதிக்கு ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் வாடிப்பட்டி விராலிப்பட்டி பிரிவு பகுதியில் சாலையில் பழுதாகி நின்ற ஒரு லாரியில் எதிர்பாராத விதமாக மோதியதில் தனியார் பால் நிறுவன வேனின் பக்கவாட்டுப்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

இதில் வேனில் இருந்த தயிர் பாக்கெட்கள் சாலையில் சிதறின

இந்த விபத்தால் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில், வாடிப்பட்டி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.