• Mon. Nov 2nd, 2026

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு, சின்னமனூர் நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதையும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.
தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி. திருமாறன் ஜி ஆணைக்கிணங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஏ. தெய்வம் தலைமை தாங்கினார். மாநில தொண்டரணி பொதுச் செயலாளர் வி.ஆர். செல்வகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தொண்டரணி பொதுச் செயலாளர்கள் எஸ். சிவா மற்றும் எம். ராஜேஷ்கண்ணா ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் தேவர் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பிரம்மாண்டமான அன்னதானமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ். சாருக்கான், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் டி. பிரேமாராணி மற்றும் மாநில, மாவட்ட, நகர், ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.