சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில் அமைந்துள்ள பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாரத் சட்டக் கல்லூரியின் 44-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் S. சௌந்தர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் கௌரவ விருந்தினராக நீதியரசர் M. வேணுகோபால் கலந்து கொண்டார். மொத்தம் 216 மாணவர்கள் பட்டம் பெற்றனர் இதில் 3 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

விழாவில் நீதியரசர் சௌந்தர் பேசுகையில்,
எத்தனை செயற்கை நுண்ணறிவு (AI) வந்தாலும் தீர்ப்பு வழங்கும் இடத்தில் ஒரு மனிதன் தான் இருக்கப் போகிறார் எனவே இளம் வழக்கறிஞர்கள் வெறும் கணினி மென்பொருட்களை மட்டும் நம்பி இருக்கக்கூடாது கடின உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வோடும் நீதிமன்றத்தில் செயலாற்றினால் தான் சிறந்த வழக்கறிஞர்களாக திகழ முடியும் ஒரு சிறந்த வழக்கறிஞர் என்பவர் சிறந்த அறிஞராகவோ பேச்சாளராகவோ இருப்பது மட்டும் போதாது கட்சிக்காரரின் வழக்கை முழுமையாக புரிந்து நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

மேலும் நீதியரசர் வேணுகோபால் பேசுகையில், சட்ட பட்டதாரிகள் AI-யை அளவுக்கு அதிகமாக சார்ந்திருக்காமல், தங்கள் சொந்த அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
விழாவில் துணைவேந்தர் டாக்டர் R. ஹரி பிரகாஷ், கல்லூரி முதல்வர் டாக்டர் முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
