• Sat. Oct 31st, 2026

தாம்பரத்தில் திமுக மகளிர் அணியினர் 3000 பேர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ByPrabhu Sekar

Oct 31, 2026

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, போதைப்பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை, குழந்தைகள் கடத்தல் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ சேலம் சுஜாதா கூறுகையில்,
“விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, த.வெ.க ஆட்சியாளர்கள் திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்வதை விடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.