தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறைச்சாலையில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
“தேனி மாவட்ட சிறையில் பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வு (செக்யூரிட்டி ஆடிட்) நடத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் மீண்டும் பாதுகாப்பு தணிக்கை (Security Audit) மேற்கொள்ளப்படும். இதில் எங்கேனும் குறைபாடுகள் அல்லது இடைவெளிகள் (Gaps) கண்டறியப்பட்டால், அவை உடனடியாக சரிசெய்யப்படும்.
சிறை நிர்வாகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை 100 சதவீதம் முழுமையாக அமல்படுத்துவதற்கும், எந்தவித குளறுபடிகளும் ஏற்படாமல் கண்காணிப்பதற்கும் உரிய உத்தரவுகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் சிறைகளில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் முன்கூட்டியே தடுக்க முடியும். சிறைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கைதிகள் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகரிக்கும்போது, அவர்கள் மற்ற இடங்களுக்கு மறுபங்கீடு செய்யப்படுகிறார்கள்.”
இவ்வாறு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. தெரிவித்தார்.