• Sat. Oct 31st, 2026

அலங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளை..!

ByKalamegam Viswanathan

Oct 31, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வெள்ளிமலையான் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் ( 54) கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் தனியாக வசித்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி கதவை திறக்க முயன்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.3 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

திருட்டு தொடர்பாக முருகன் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மதுரை அலங்காநல்லூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.3 லட்சம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.