• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ரேசன்கடை கண்காணிப்பு குழு கூட்டம் கருப்பையா எம்.எல்.ஏ., பங்கேற்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில்பொது விநியோகத் திட்டம் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு நியாய விலை கடைகள் செயல் பாடுகள் குறித்து கண்காணிக் கும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (நிலம்) வெற்றி செல்வி தலை மை தாங்கினார். கருப்பையா எம்.எல். ஏ., தாசில்தார் சுந்தரவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் மோகன் சுந்தர் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சுதாமதி, ராஜேந் திரன், ராமலட்சுமி, ஜெய வீரபாண்டி துரை, அழகு ராணி,எரிமலை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.