• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

தடைசெய்யப்பட்ட மாவோஸ்ட்-நக்ஸ்லைட் தான் கம்யூனிஸ்ட்!

ByKalamegam Viswanathan

Oct 28, 2026

ஒரு நாட்டை வளர விடக்கூடாது என அப்பாவி மக்களை மூளை சலவை செய்து..
இந்த தேசத்திற்கு எதிராக துவங்கப்பட்டதே இந்த கம்யூனிஸ்ட் நக்ஸ்லைட் இயக்கம் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதி இயக்கங்கள்..

இதுக்கு அவங்க தரப்பில் சொல்லப்படக்கூடிய ஒரு உருட்டு என்னன்னா இந்திய அரசு மலை வளங்களை கொள்ளை அடிக்கிறது என்று..

அடுத்ததா அம்பானி அதானி பாஜக கார்ப்பரேட் என்று தூக்கிட்டு வருவாங்க நக்ஸ்லைட் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு பார்த்தீங்கன்னா 1955 TO 60 இந்த காலகட்டங்களில் நக்சலைட் இயக்கம் ஆரம்பமாகிறது..
இந்த காலகட்டத்தில் பாஜக எனும் கட்சியே கிடையாது..

மத்தியிலும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிகள் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது கிட்டத்தட்ட 2004 வரை கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிதான் இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. அப்படின்னா இயற்கை வளங்களை இவங்களும் சேர்த்து தானே சுரண்டி இருக்கணும்..

இதெல்லாம் வரும் ஒப்புக்கு சப்பு நியாயங்கள் இந்த நாட்டை வளர விடாமல் தடுப்பதே கம்யூனிஸ்ட் தான் மக்களுக்கு எந்த அடிப்படை திட்டங்களையும் போக விடமாட்டானுங்க..

மலைவாழ் மக்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது,
மின்சார கம்பங்களை வெட்டி விடுவது , சாலைகளை தகர்த்து எறிவது,
அப்பாவி மக்கள் பயணம் செய்யும் ரயிலில் செல்லும்போது ரயில் தண்டவாளங்களில் குண்டு வைப்பது,காவல் நிலையங்களை சூறையாடுவது,பொது சொத்துக்கு குண்டு வைத்து சேதம் விளைவிப்பது,நமது ராணுவ வீரர்களை கொன்று குவிப்பது,இந்திய அரசாங்கத்திற்க்கு எதிரா போராடுவது என மக்களை நாட்டுடன் எந்த தொடர்பும் இல்லாமல் பிரித்து வைத்தனர்.

கிட்டத்தட்ட 70 வருடங்களில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் கோடிகளை இந்திய அரசாங்கம் இழந்துள்ளது.இந்திய வளர்ச்சி தடைபட்டது பல இந்திய முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் கட்டமாக இவர்களை அழிக்கும் பணி துவங்கியது. முதலில் செய்த தரமான வேலை குண்டு வைத்தாலும் அழிக்க முடியாத சாலைகளை உருவாக்கியது பாஜக அரசு.

இது ஒரு புறம் இருக்க மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது மின்சாரம் என்றால் என்னவென்று தெரியாத மக்களுக்கு மின்சாரம் கிடைத்தது.

இப்போது மிச்சம் மீதி இருக்கிற நக்ஸ்லைட்டுகளும் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்டர் ஆகி விட்டனர். பாஜக அரசின் அதிரடியால் நக்சலை இயக்க தலைவர்கள் நிறை குறைந்து போய் சரணடைந்திருக்கிறார்கள்.

இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.காரணம் இந்த விஷ செடிகளில் ஒன்று திரும்ப முளைத்தாலும் நமது தேசத்திற்கு ஆபத்துதான் அதனால் இது முற்றிலுமாக களையப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆனால் கம்யூனிஸ்டுகள் ஆண்ட கேரளாவில் ஏன் நக்ஸ்லைட் இல்லை என ஆழ்ந்து யோசித்தால் உலக அரசியல் உங்களுக்கும் புரியும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் வந்தால் இங்குள்ள கம்யூனிஸ்ட்களின் நிலைபாடுகள் சீனாவை தான் ஆதரிக்கும்.புரட்சி போராளிகள் என்ற பெயரில் உண்ட வீட்டுக்கே துரோகம் செய்வது தான் கம்யூனிஸ்ட்டின் அரசியல்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட இங்குள்ள புரட்சியாளர்கள் என்று கருத கூடிய தேசபக்தர்களை கம்யூனிஸ்ட் பிடிக்காது.அவர்களுக்கு பிடித்தது எல்லாம் காரல் மார்க்ஸ், சேகுவேரா,ஸ்டாலின் போன்ற வெளிநாட்டு இறக்குமதி புரட்சியாளர்களை மட்டும் தான் இந்த நக்ஸ்லைட் என்ற கம்யூனிஸ்ட்டுக்கு புடிக்கும்.தனது சொந்த நாடான வளர்ச்சி அடைந்த இந்தியாவை பார் என்று கம்யூனிஸ்ட்யினர் கூறாமல் ரஷ்யாவை பார் சீனாவை பார் என்று கூறுவார்கள்.

புரட்சி என்ற பெயரில் தொழிலாளர் வர்க்கம் விவசாயம், வணிகம், தொழிற்சாலை,அரசு துறைகள் சங்கங்கள் என்ற பல்வேறு போர்வையில் ஊடுறவி இந்திய தேசத்திற்க்கு இந்திய சட்டத்திட்டங்களுக்கு எதிராக நம் இந்திய மக்களை தூண்டுவிட்டு குளிர்காயும் கம்யூனிஸ்ட்களின் மறு வடிவமும்,கம்யூனிஸ்ட்களால் உருவாக்கப்பட்டது தான் தடைசெய்யப்பட்ட நக்ஸ்லைட் எனும் தேசவிரோத பயங்கரவாத அமைப்பு என்பதால் கம்யூனிஸ்ட் தான் நக்ஸ்லைட் அமைப்பு..
நக்ஸ்லைட் தான் கம்யூனிஸ்ட் அமைப்பு என்று எத்தனை பேருக்கும் தெரியும்.

தற்போது நக்ஸ்லைட்டுகள் அனைவரும் ஆயுதங்களுடன் சரணடைந்து வருகிறார்கள் என்றால் பாஜகவின் கட்சியால் இந்தியாவை ஆளும் மாண்புமிகு பாரதபிரதமர் மோடிஜியும், இந்நாட்டின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷாஜியின் நடவடிக்கையே காரணம்.

மேலும் SIR மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மாணவர்கள் என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு டெல்லியில் கலவரத்தில் ஈடுபடுவதும் இந்த கார்ப்பிரேட் கம்யூனிஸ்ட்கள் தான்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊடுறவி புரட்சியாளர்கள் என்று மகஇக,தமுஎசக,மக்கள் அதிகாரம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,மாதர்சங்கம், மதநல்லிணக்க கூட்டமைப்பு என பல்வேறு போர்வையில் ஒழிந்து கொண்டு இந்திய தேசத்திற்க்கும்,இந்து சனாதன தர்மத்திற்க்கும் எதிராக பல்வேறு பிரிவினையை தூண்டியும்,பல்வேறு அன்னிய சித்தாத்தங்களை பரப்பியும் சீனாவின் கைகூலியான கம்யூனிஸ்ட் கட்சிகளையும்,அதனுடைய துணை அமைப்புகளையும் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேசபக்தியுள்ள இந்திய மக்களின் கோரிக்கையாகவே இருக்கிறது.

-சோலைகண்ணன்
இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர்
நாள்:28/10/2026.