விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி, வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமல்,சப் இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன், ஆகியோர் தலைமையில் போலீசார் தாயில்பட்டி அருகில் உள்ள மண்குண்டாம்பட்டி முக்கு ரோட்டில் தீபாவளி சீசனை முன்னிட்டு பட்டாசுகள் கொண்டு செல்லப்படும் வாகனங்களை சோதனை நடத்தினர்.

குறிப்பாக பட்டாசு கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் பட்டாசுகளுக்கு உரிய பில் இருக்கிறதா எனவும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் கொண்டு செல்ல படுகிறதா என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் பட்டாசுகளை ஏற்றி,இறக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பட்டாசுகள் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணம் இல்லாமலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு பட்டாசுகள் கொண்டு செல்ல முயற்சி செய்யக் கூடாது.

அவ்வாறு செய்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அபராதமும் விதிக்கப்படும் என சூப்பிரண்டு குருசாமி தெரிவித்தார்.




