மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.5.90 கோடிமதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணியினை கருப்பையா எம்.எல்.ஏ.,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மழைநீர் சேமிப்பு தொட்டிகட்டுமானம் ,அலுவ லக அறைகள், கூட்ட அறை, பதிவு அறை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கி பணியினை கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராஜ மார்த்தாண்டன்,ஒன்றிய பொறி யாளர் துர்காம்பிகை, வசந்தி,ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் கிரிஜா, ராஜசூர்யா மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு, சரவணன், பேரூர் செயலாளர் பசுமணியன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.





