தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பருவமழை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது பருவ மழை பாதிப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு மண்டலம் வாரியாக அந்தந்த பகுதிகளில் மின் மோட்டார்கள் மணல் முட்டைகள் பொதுமக்களை தங்க வைக்கும் பாதுகாப்பு விடுதிகள் என பலவற்றையும் தயார் செய்துள்ளோம்.

கடந்த பருவமழையின் போது திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் எங்களுடன் தொடர்பில் இருந்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள சொல்லி உத்தரவிட்டார்கள் தற்போது மாநகராட்சி கவுன்சிலர்கள் மண்டல குழு தலைவர்கள் இணைந்து கலந்து ஆலோசித்து முடிவெடுத்து ஒவ்வொரு வார்டுகளிலும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறித்து ஆய்வு மேற்கொண்டு அதை மாநகராட்சி ஆணையரிடம் விரிவாக கூறினோம் அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.

பம்மல் நல்லதம்பி சாலை சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது அதைப்போல கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாய் பணிகள் தற்போது முடிவடைந்து இருக்கிறது மேஜர் முகூந்த வரதராஜன் சாலையும் 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. எந்த சாலையில் எல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறதோ அந்த சாலையில் எல்லாம் கவுன்சிலர் சென்று சாலையை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறிய நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் சார் ராஜா இருந்தவரை தாம்பரம் மருத்துவமனைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மருத்துவமனை மேம்படுத்துதலையும் கவனத்தில் கொண்டார் தற்போது உள்ள அரசு தாம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்சனைகளை குறித்து கண்டு கொள்வதில்லை என்று தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பருவ மழை காலங்களில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக கவுன்சிலர்களை அழைத்தும் மேயரை அழைத்தும் பருவ கால மதிப்பிற்கான நடவடிக்கைகளுக்கான கூட்டத்தை கூட்டவில்லை. எந்த ஒரு ஆலோசங்களையும் கேட்கவில்லை மழைக்கால தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தற்போதுள்ள அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் இதுவரை எடுக்கவில்லை எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது தான் வாடிக்கையாக வைத்துள்ளார்.

தாம்பரம் தொகுதி அமைச்சர் பல்வேறு ஆய்வுகளை செய்கிறார் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர் எங்கு தான் ஆய்வு செய்கிறார் எப்போது செய்கிறார் என்பது தான் தெரியவில்லை அதை யாரிடமும் சொல்லவில்லை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அவர் எங்கு ஆய்வு செய்கிறார் என்பதை கூற வில்லை மக்களுக்கும் கூறவில்லை எங்கு சென்றாலும் ரீல்ஸ் எடுப்பது அதை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது மக்களின் பிரச்சினைகளை குறித்து யோசிக்க நேரம் இல்லாமல் இருக்கிறார்கள்.
தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தாம்பரம் மேயருடனும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுவதில்லை இதேபோல் அதிகாரிகள் செயல்பட்டால் எங்களுடைய மாவட்ட தலைமையிடம் பேசி கூடிய விரைவில் மாநகராட்சிக்கு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.




