• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் புதிய பாதையை உருவாக்கியவர் முதல்வர் விஜய் ..,

BySeenu

Oct 27, 2026

கோவையில் ரசிகர்களுடன் இணைந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா, செய்தியாளர்களிடம் பேசினார்.அதில்

கோவை பிராட்வே சினிமாஸில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் முழுமையான கமர்ஷியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட படமாக இருக்கும் என்று ரெஜினா தெரிவித்தார்.

இப்படத்தில் நயன்தாராவுக்கும் தனக்கும் இடையே நேருக்கு நேர் மோதும் காட்சிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற கதாபாத்திரத்தில் இதுவரை நடித்ததில்லை என்றார். மேலும், வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது புதுமையான அனுபவமாக இருந்ததாகவும், அந்தக் கதாபாத்திரத்தை ரசித்து நடித்ததாகவும் கூறினார்.

தான் ஏற்று நடித்துள்ள பைரவி கதாபாத்திரம் வித்தியாசமான அறிமுகத்தைக் கொண்டிருக்கும் என்றும், அதற்காகக் கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்தார். படத்திற்காகச் சண்டைப் பயிற்சிகளிலும் ஈடுபட்டதாகக் கூறினார்.

நயன்தாரா இப்படத்தைத் தனது தோளில் சுமந்து உருவாக்கியுள்ளதாகப் பாராட்டிய ரெஜினா, ஒரு பெண் நடிகையாக இத்தகைய பெரிய திரைப்படத்தை முன்னெடுத்திருப்பது தனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு அனுபவம் கிடைக்கும் என்றும் கூறினார்.

திரையரங்கில் இப்படத்தைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும், படம் வெளியான பிறகு மீண்டும் கோவை வர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய ரெஜினா, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார். அரசியலில் புதிய பாதையை உருவாக்கியவர் முதல்வர் விஜய்

சினிமாவில் இருந்து பலர் எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட பொறுப்புகளுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசியலுக்கு வருவது குறித்து தனக்கு ஆர்வம் ஏற்படும் பட்சத்தில் அது அனைவருக்கும் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்னும் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்புடைய மற்றொரு படத்திலும் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல்களுக்கு தான் ரசிகை என்றும், கல்லூரிப் பருவத்திலிருந்தே அவரது பாடல்களைக் கேட்டு வருவதாகவும் கூறினார்.

‘