தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்திறனை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசின் சார்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையிலான முதல்வர் கோப்பை போட்டியளானது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தடகளப் போட்டிகள் , கூடை பந்தாட்டம், கபடி , பால்பேட் மிண்டன் , கால்பந்தாட்டம், ஸ்கேட்டிங், டேக்வாண்டோ , ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அந்தப் போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய மாணவ மாணவிகளுக்கு இறுதிப் போட்டியானது நடைபெற்று வருகின்றது .

இதில் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் நடைபெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 38 அணிகளுக்கு திண்டுக்கல் பி எஸ் என் ஏ பொறியியல் கல்லூரியில் இறுதி போட்டியானது இரண்டு தினங்கள் நடைபெற்று வருகிறது . இதன் துவக்க விழா இன்று வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன் வீரர், வீராங்கனைகளை வரவேற்கும் விதமாக துவங்கியது .

இந்த இறுதி போட்டியில் வெற்றி பெறக்கூடிய மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை மற்றும் முதல் பரிசாக ஒரு லட்சமும் இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் மூன்றாவது பரிசாக 50,000 வழங்கப்பட உள்ளது.




