• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கன மழையில் வீடு இடிந்து விழுந்து 12ம் வகுப்பு பள்ளி மாணவி பலி..!

ByK Kaliraj

Oct 23, 2026

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது

எனினும் பகல் முழுவதும் மழை பெய்யாமல் மேகமூட்டமாகவே காணப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் லேசான மிதமான மழையாக பெய்ய ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து சாத்தூர் மற்றும் அதனை சுற்றி வட்டார பகுதிகளில் தொடர் கனமழையாக இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது

இந்த கனமழையின் காரணமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தில் தெற்குத் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளியானசெல்வம் மற்றும் அவரது மனைவி சோலையம்மாள் மகள் முத்துச்செல்வி (வயது 17 ) ஆகியோர் மண்சுவரால் கட்டப்பட்ட வீட்டில் குடியிருந்துள்ளனர்

இந்த நிலையில் நங இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையினால் மண் சுவர் ஈரப்பதம் அடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது

இதில் வீடு முழுவதும் விழுந்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பள்ளி மாணவி முத்துச்செல்வி கட்டிட இடுப்பாடுகளை சிக்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது தாயார் சோலையம்மாள் படுகாயம் அடைந்த நிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாத்தூர் வருவாய் துறையினர் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

ஒரு நாள் பெய்த கன மழையில் வீடு இடிந்து விழுந்து அருகில் உள்ள சின்னக்காமன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி 17 வயது முத்துச்செல்வி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது