தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த போது,
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது, அக்டோபர் 26 ஆம் தேதி வரை தேனி மாவட்டத்திற்கு அதிக கன மழைத்தான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை மைய மழை முன்னறிவிப்பு செய்துள்ளது.

இதையடுத்து தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 335,40 மில்லி மீட்டர் மழை
பதிவாகியுள்ளது. 25.80 சராசரி மழை பெய்துள்ளது.
இதுவரை தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததில் முல்லைப் பெரியாறு அணியின் நீர் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 119 மில்லி மீட்டர் மழையும் அதற்கு அடுத்து உத்தமபாளையத்தில் 45 மில்லி மீட்டர் என்ற அதிக மழை பதிவாகியுள்ளது.

முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி வராக நதி, மூல வைகை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளை கடக்கவோ குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
45 மழை ஆபத்து பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கண்காணிப்பு தீவிரம், பேரிடர் காலத்தில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 65 கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளது.
அணைகளில் போதிய நீர் இருப்பு வைக்க முடியும் என்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, முல்லைப் பெரியாறு ஆறு உள்ளிட்ட பல்வேறு நீர் வழித்தடங்கள் மூலம் விநாடிக்கு 4,000 கன அடிக்ககும் அதிகமான நீர்வரத்து வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இது வெள்ளம் அபாயம் விடுக்கும் அளவுக்கான நீர்வரத்து இல்லை. மக்கள் கவலை கொள்ள வேண்டாம். வெள்ள தடுப்புக்காக 7,500 மணல் மூடைகள் தயார் நிலையில் உள்ளது.
தேனி மாவட்டத்தில் இதுவரை மழைச்சேதம் எதுவும் பதிவாகவில்லை. குமுளி போடி மெட்டு கம்பம் மெட்டு மேகமலை மலைபகுதிகள் கண்காணிப்புக்குள் உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் அழைக்கும் அளவுக்கு தற்போதைக்கு அவசியம் இல்லாத நிலை உள்ளது. மலை கிராமங்களில் புதிய மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுபள்ளிக்கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தேனி ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




