புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டியாவயல் பகுதியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வாகத்தில் மரக்கன்றுகளை நடும்பணியை தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் இணைந்து தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமணன் தொடங்கி வைத்தார். இதன் பிறகு அந்த கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வெங்கட ரமணன் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்:
குறுவை சம்பா சாகுபடி எதுவுமே போகவில்லை எல்லாமே இருக்கிறது. 25-26ல் 63 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளுங்கள் செய்யப்பட்டது. வழக்கமாக ஒரு சீசனில் நாற்பதில் இருந்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் ஆகும். சென்ற ஆண்டு மழை அதிகமாக பொழிந்ததாலும் பொது மக்களின் தேவை அதிகமாக இருந்ததாலும் 63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலை பெற்றுள்ளோம்.
சென்ற ஆண்டு செப்டம்பர் 1 முதல் டிசம்பர் வரை 7.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 3.70 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பருக்கு பிறகு வரும் சீசனில் நெல் கொள்முதல் சற்று குறைவாக தான் இருக்கும் மழைப்பொழிவு குறைவு காரணமாக கடந்த ஆண்டில் நெல் கொள்முதலில் தற்பொழுது பாதியளவு வந்துள்ளது. இன்னும் எஞ்சியிருக்கக்கூடிய ஒன்றை முதல் இரண்டு மாத காலத்தில் இன்னும் மூன்று முதல் மூன்று லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பா சாகுபடி எப்போதும் இந்த பருவ காலத்தில் குறைவாக தான் இருக்கும். கடந்தாண்டை ஒப்பிடும்போது 20% மட்டுமே குறைவாக உள்ளது. பற்றாக்குறை எதுவும் இல்லை நெல் போதிய அளவு உள்ளது. நெல்லை அரவிக்கு அனுப்பி அந்தந்த மாதங்களில் பெற்று அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திரா கர்நாடகா கேரளா தெலுங்கானா ஒரு லிட்டர் மாநிலங்களை ஒப்பிடும்போது ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2026 தமிழ்நாட்டில் கணக்கெடுப்பின் அடிப்படையில் அரிசி பருப்பு ஆயில் பூண்டு புளி மிளகாய் என 61 பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் விலைப்பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

செப்டம்பர் வரை 38 மாவட்டங்களிலும் கணக்கெடுக்கப்பட்டதன் அடிப்படையில் அரிசியின் விலை சராசரியாகவே இருந்தது.
கர்நாடகாவில் இருந்து பொன்னி அரிசியும் தெலுங்கானாவில் இருந்து வரக்கூடிய அரசியும் சென்னைக்கு வருகிறது. அங்கிருந்து வரக்கூடிய அரசி வரத்து குறைவாக இருந்தது. மழைக்குறைவு காரணமாக. தற்போது தான் அங்கு சற்று மழை பொழிவு அதிகரித்து வேளாண் பணிகள் நடைபெற்று நெல் கொள்முதலை ஆரம்பித்துள்ளனர் தீபாவளிக்குள் நவம்பர் மாதத்திற்குள் அரிசிகள் அதிகளவு தமிழ்நாட்டிற்கு அங்கிருந்து வரும். அப்படி வந்து விட்டால் கர்நாடக ஆந்திரா பொன்னி அரிசிகள் விலை கட்டுக்குள் வந்துவிடும்.
ஒரு லட்சம் மெட்ரிக் டன் இலக்கு வைத்து தான் சன்னரக அரிசி 30 ரூபாய்க்கு விற்பனையை தொடங்கி வைத்தோம் ஏற்கனவே 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொடுத்து விட்டோம். 25000 மெட்ரிக் தனக்கு கொள்ளுங்கள் நடைபெற்றுள்ளது அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி கூட்டுறவு பண்டகசாலை அர்பன் அமுதம் அங்காடி மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அரிசியோடு ஐந்து பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பை கொடுத்துள்ளோம் 252 ரூபாய் கொள்முதல் விலையில் 200 ரூபாய்க்கு கூட்டுறவு பண்டகசாலை மூலமாக பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறோம்.
மோட்டாராகம் சன்நரகம் என இரண்டு வகை அரிசி உள்ளது மோட்டாரகம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் அதைக் குறைத்து சன்னரக அரிசி கொடுக்க நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு சில இடங்களில் சன்னரக அரிசி தரமாக இல்லை என்று கூறுகிறார்கள் அதனையும் மேம்படுத்தி தரமாக கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கர்நாடகா கேரளா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிவில் சப்ளை சிஐடி மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கூட்டுறவு பண்டகசாலையிலும் ரேஷன் கடைகளிலும் அதிகப்படியான ஆய்வுகள் நடத்தி ரேஷன் அரிசி பதில்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விலையற்றதற்கு இரண்டு காரணம் இருக்கிறது பதுக்கள் மற்றும் வரத்து குறைவு காரணம்தான். பதுக்கள் குறித்து புகார் கொடுத்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து துறை மூலமாகவும் தினசரி பதுக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பது என்பது பொதுவானது தான் அனைத்து குற்றச்சாட்டுகளையும் உள்வாங்கி எது நடைமுறைக்கு சரியானதாக இருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் தனுஷ் புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது அமைச்சர் முகமது பர்வேஸ் போதும் போதும் போதும் என்று தெரிவித்து அமைச்சர் வெங்கடா ரமணனை அங்கிருந்து அழைத்துச் சென்றதால் வெங்கடரமணன் அதிகரித்த கேள்விக்கு பதில் செல்லாமல் அங்கிருந்து சென்றார்.



