திருவாரூர் மாவட்டம் கோட்டூர் (G3-KOTTUR) பகுதியில் கிராமப்புற வேளாண் களப்பயிற்சியில் (RAWEP) ஈடுபட்டு வரும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு. வெ. மோகனசந்திரன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு குறித்த வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் முறை, பாடத்திட்டங்கள் மற்றும் அரசுப் பணிகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என மாணவிகள் தெரிவித்தனர்.




