• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அரசினர் தொழில் பயிற்சி பள்ளியில் மின் விசிறி மற்றும் ட்யூப் லைட் வழங்கும் விழா..,

ByS. SRIDHAR

Oct 14, 2026

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ரோட்ராக்ட் சங்கம் இணைந்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 4 மின்விசிறி 15 ட்யூப் லைட் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் Rtn.PHF.S.அப்துல் ரகுமான் தலைமையில்‌ வழங்க அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர்கள் MK.முருகேசன், B.காத்தலிங்கம் P.யோகச்சந்திரன் மேலாளர் P.மோகன்ராஜ் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் பொருளாளர் கண.மோகன் ராஜா வரவேற்றார். நிகழ்வில் ருக்குமணி P.ஜோதிமணி ரோட்ராக்ட் சங்க தலைவர் S.சிற்றரசு செயலாளர். S.ரமணன் பொருளாளர் R.ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி பிரார்த்தனையை மேனாள் செயலாளர் R.சங்கர் வாசித்தார். விழாவில் R.பாலமுருகன், VRM.தங்கராஜ், R.சண்முகம், R.கார்த்திக், சையது இப்ராஹிம், K.கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்கச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூட விழா இனிதே நிறைவு பெற்றது.