• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்..,

BySeenu

Oct 13, 2026

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அப்பொழுது பேசிய அவர் : ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ என்ற சொற்களை வைத்து இரு அரசுகளுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

நெசவாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே தெளிவான விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார். தொழிற்சாலைகளின் மின்சாரக் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும், தேர்தலில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

இலவசப் பயணத் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து, இரண்டு அல்லது மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.