• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பிரச்சினைக்காக போராடும் மக்கள் மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் கைவிட்டு மக்களுடைய ஜனநாயக உரிமையை காப்பாற்றுவதற்கு தவெக அரசு முன்வருமா ?

ByKalamegam Viswanathan

Oct 13, 2026

ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது என்பது மக்களுடைய அடிப்படை உரிமையாகவும், அரசு அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறான முடிவுகளை சுட்டிக்காட்டவும், மக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும், போராட்டம் என்பது அவசியமானது;

. அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின் நசுக்காமல், அவர்களின் கோரிக்கைகளை அழைத்துப் பேசி, அவர்களது எதிர்பார்ப்புகளை, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது;
அதுதான் ஜனநாயகத்தின் மாண்பு.

ஆனால் தவெக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற இந்த 5 மாதங்களில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த வேண்டும் என தவெக அரசு திடீரென அறிவுறுத்தியுள்ளது. அதோடு, காவல்துறை மூலம் கடுமையான ஒடுக்குமுறையும், அடக்குமுறையும் எடுக்கப்பட்டு வருகின்றன;

தவெக கட்சி சார்பில் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் பிரதானமாக பயிர் கடன் தள்ளுபடி, அந்த பயிர் கடன் தள்ளுபடி முழுமையாக வேண்டும் என்பதை வலியுறுத்தி, விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால் அதை 3 முறை அந்த அரசாணை திருத்தப்பட்டு, அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது; ஆனால் இப்போது வரை பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்கிற அறிவிப்பு வெளியேறவில்லை. அதோடு, கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி அதைத் தொடர்ந்து சம்பா, இவையெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பதால் வறட்சி மற்றும் இழப்பீடுக்கான நிவாரணம் வேண்டி விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதில், அந்த போராட்டங்களை ஒடுக்குவதில் முதல்வர காட்டுகிற அக்கறை, அதற்கு தீர்வு காண்பதில் அவர் காட்டவில்லை என்பதுதான் மக்களின் கவலையாக விவசாயிகளகன் கவலையாக இருக்கிறது.

அதேபோன்று, தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறார்கள்; தேர்தலுக்கு முன்பாக விஜய் நடிகராக இருந்தபோது, அவர்களை எல்லாம் அழைத்து பொன்னாடை அணிவித்து அவர்களுக்கு, டீ, காபி எல்லாம் கொடுத்து, உபசரித்து, உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று அவர்கள் ஆறுதல் கூறினார் .

அன்றைய திமுக அரசு செய்யாததை திரைப்பட நடிகராக தவெக கட்சித் தலைவராக விஜய் செய்கிறாரே என்று அந்த தூய்மைப் பணியாளர்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக விஜய் கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய ஒரு நிலையை அவர்கள் உருவாக்கினர். ஆனால் தற்போது அதே தூய்மைப் பணியாளர்கள் போராடுகிறபோது, அவர்கள் திரும்பி கூட பார்ப்பதற்கு விஜயக்கு நேரமில்லை;.

முதல்வராக வந்ததினால் வேலைஅதிகமாக இருக்கலாம். இருந்தாலும், உங்களை நம்பி வாக்களித்த அந்த தூய்மைப் பணியாளர்கள் வீதியிலே கிடந்து அழுது புலம்புகிறார்களே; அந்த அழுகுரலுக்கு உங்களுடைய கருணைப் பார்வை எப்போது கிடைக்கும் என்று அந்த போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிக சங்கங்களும் போராட்டங்களை நடத்துகிறார்கள்; அதேபோல, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு இளநிலை சுகாதார பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல்துறை அவர்களை கைது செய்து, அவர்கள் போராட்டத்தை ஒடுக்கியது.

தவெக அரசு போராடுகிற மக்களுடைய கோரிக்கைகளை அக்கறையோடு கேட்கும் என்ற நம்பிக்கையிலே தான் அவர்கள் வீதியிலே இறங்கி போராடுகிறார்கள். ஆனால் அதற்கு தீர்வு காணுவதற்கு பதிலாக, ஒடுக்குவதிலே தான் அக்கறை செலுத்துகிறது.இதை தான் இந்த 5 மாத காலங்களில் தவெக அரசு தன்னுடை அணுகுமுறையாக வெளிப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பின், அவர்களது கோரிக்கை கிடப்பில் கிடக்கிற காரணத்தினால் அரசு செவிசாய்க்கவில்லை என்ற நிலையில், நேற்று அவர்கள் போராட்டம் நடத்தியபோது, குண்டுகட்டாக ஏதோ தீவிரவாதிகளை போல ஒடுக்குவது, அடக்குவது, அந்த அந்த அணுகுமுறையை கையில் எடுத்திருப்பதை எல்லோரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி தமிழகம் போராட்டக் களமாக இருந்து வருகிறது.

தவெக ஆட்சி பொறுப்பு ஏற்றில் இருந்து, தமிழகம் முழுவதும் தொடர்ந்து மின்தடையால் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமைச்சரும் சரி, தவெக ஆட்சியாளர்களும் அதை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை

. ஏற்கனவே அமைச்சர்களுடைய விழாக்களில் மின்தடை ஏற்பட்டது; அதையெல்லாம் கூட அவர்கள் சமாளித்தார்கள். ஆனால் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில்
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அமைச்சர் நிர்மல் குமார் புஸி ஆனந்த் அறைகளில் மின்தடை ஏற்பட்டது.அனைத்து ஊடகங்களிலும் அது முக்கியத்துவம் பெற்றது.

இதை எப்படி மறைக்க முடியும்? இப்போதும் இதை மறுப்பதற்குத்தான் முயற்சி செய்கிறார்கள். இதை நியாயப்படுத்துவதற்குத்தான் முயற்சி செய்கிறார்கள்குறிப்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில நள்ளிரவு 11 மணி முதல் 6:00 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் வீதியிலே இறங்கி மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்திலே ஈடுபட்டு வருகிறார்கள்.

தலைமைச் செயலகத்தை மாற்ற தவெக அரசு மாற்ற வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிட்டார்கள். அதிலும் சர்ச்சையாக இருக்கிறது. அரசாணையை வெளியிடாமல் மர்மமாக வைத்திருக்கிறது. வெளியிட்டால் அது சர்ச்சையாக வருகிறது மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்துகிறார்கள் இதுவரைக்கும் அந்த மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தவெக அரசு தயாராக இல்லை.

இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், கடந்த ஆகஸ்ட் மாதம் கம்யூனிஸ்ட் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று தவெக அரசுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஜனநாயக ரீதியிலான போராட்ட உரிமையை தவெக அரசு பறிப்பதாக அந்த சுற்றறிக்கையை எதிர்த்து கடுமையான போராட்டம் வந்த பிறகு, சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது.

அரசாணை என்பது இறுதி செய்யப்பட்டும் ஒரு திட்டங்களை செயல் வடிவத்துக்கு கொண்டு வருவதற்கான உத்தரவு. ஆனால் அந்த அரசு உத்தரவையே வாபஸ் வாங்கக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறது என்றால், இந்த ஆட்சியின்ஔஸ்திரத்தன்மை, மக்கள் இவர்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை, படிப்படியாக குறைந்து கொண்டே வருவதற்கு காரணம், அவர்களுடைய உறுதியான நடவடிக்கையில் பின்வாங்கிக் கொண்டே இருப்பது யாருக்கும் இவர்கள் மீது அரசு அதிகாரிகளுக்கும் சரி, மக்களுக்கும் சரி, அந்த நம்பிக்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கு இடையில் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையால் போராட்டம், சட்ட ஒழுங்கு சீர்கெட்டினால் கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டித்து, அதில் உயிரிழந்தவர்களுடைய உறவினர்கள் சாலை வீதிகளிலே போராட்டம், அதேபோன்று. விலைவாசி உயர்வுகளுக்குதையும் வந்து மூடி மறைக்கிறார்கள். எதையும் இந்த அரசு ஏத்துக்கிறதுக்கு தயாரா இல்லை.

அரிசி காய்கறி வ எண்ணெய் விலை, பருப்பு விலை எல்லாம் உயர்ந்துருச்சுன்னு சொன்னா, அமைச்சர் அதை ஏத்துக்கிறதை மறுக்கிறார். சட்ட ஒழுங்கு, கொலை, கொள்ளை நடக்குது, சட்ட ஒழுங்கு சீரழிஞ்சு போச்சு, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி சொன்னா, முதல்வர் ஏத்துக்க மறுக்கிறார். ஆக, உண்மை நிலவரங்களையே ஏத்துக்க மறுக்கிற இந்த அரசு, எப்படி அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வரும்? அதனால்தான் தமிழகமே இன்றைக்கு போராட்ட களமாக இருக்கிறது.

ஆகவே, தீர்வு காண்பதற்கு பதிலாக, அடக்குமுறையை கையாளுவது ஒரு ஜனநாயகத்திற்கு மாண்பாக அமையாது., எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கிறபோது, 40,000 மேற்பட்ட போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கொடுத்து, ஜனநாயகத்தினுடைய அணுகுமுறையை கையாண்டார்கள் என்பதையும் இந்த நேரத்திலே நான் நினைவு கூற வேண்டும்.

போராடுவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும். தவெக அரசுக்கு எதிராக போராட்டக் களத்திலே மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலே கருத்துக்களை தெரிவித்தாலும், அது தடை செய்யப்படுகிறது, நீக்கப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும் என்றும் பல கட்சித் தலைவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, இன்றைக்கு போராட்டம் என்பது ஏதோ அரசுக்கு குறை சொல்வது அல்ல. இருக்கக்கூடிய குற்றங்கள், குறைகள், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு ஜனநாயக உரிமை என்பதை எப்போது முதல்வர் விஜய் அவர்கள் புரிந்து கொள்வாரோ,

காவல்துறையை வைத்து ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் கைவிட்டுவிட்டு, அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்வதையும் கைவிட்டுவிட்டு, அவர்களை நேரிலே அழைத்துப் பேசி, அரசின் பிரதிநிதிகளோ, முதல்வரோ, அமைச்சர்களோ பேசுவது என்பதுதான் ஜனநாயகத்தினுடைய மாண்பு என்பதை இந்த நேரத்திலே வலியுறுத்தி, தீர்வு கிடைக்குமா, மக்கள் பிரச்சனைக்கு அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் ஒழிந்துவிட்டு, மக்களுடைய ஜனநாயக உரிமை தவெக அரசு காப்பாற்றுவதற்கு முன்வருமா ?