• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

செல்போன் மடிக்கணினி வேலை திருடிச் செல்லும் நபர்..,

BySeenu

Oct 12, 2026

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா பேரா மெடிக்கல் கல்லூரியில் பயின்று வரும் ஹரி கிருஷ்ணா இவர் அப்பகுதியில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தனது நான்கு நண்பருடன் கடந்த ஒரு வருடமாக தங்கி வருகிறார்.

இந்நிலையில் அறையில் இருந்து நான்கு செல்போன்கள், ஒரு மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டு உள்ளது.

இது குறித்து விடுதி உரிமையாளர்களிடம் புகார் அளித்து பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பார்த்த போது அங்கு இன்று காலை 6:15 மணி அளவில் சாவகாசமாக வரும் மர்ம நபர் ஒருவர் அறைக்குள் சென்று அறையில் இருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களை திருடி சென்று உள்ளார்.

அதேபோல் மற்றொரு பகுதியில் இருந்த அறையில் இருந்து செல்போன்களும் திருடிச் சென்று உள்ளார். இது குறித்து ஹரிகிருஷ்ணன் அறையில் இருந்து திருடப்பட்ட நான்கு செல்போன்கள் மற்றும் ஒரு மடிக்கணினி திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

கல்வி பயில்வதற்கு கட்டாயமாக மடிக்கணினி மற்றும் செல்போன்கள் தேவைப்படுவதால் உடனடியாக கண்டுபிடித்து தருமாறு வேதனையுடன் இணையத்தில் பதிவு செய்து உள்ளார்.

தற்பொழுது இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி கோவையில் அறையடுத்து தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.