• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் சத்திரம் நடுநிலைப் பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 12, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 9வது வார்டுக்கு உட்பட்ட சத்திரம் நடுநிலைப் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுசுவர் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் இருந்தது.

இது குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளியில் முழுவதும் சுற்றுச்சுவர் அமைத்து தர அதிகாரிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளை ஆய்வு செய்தபோது அங்கிருந்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளிக்கு உடனடியாக சுற்றுச் சுவர் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து விரைவில் சுற்றுச்சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச் சென்றார்.

இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது வரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பள்ளியின் வடக்கு பகுதியில் தற்காலிகமாக கம்பி வேலி போட்டு தடுப்புகள் பள்ளி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு பகுதியில் வாடிப்பட்டி சோழவந்தான் பேருந்துகள் நிற்கக்கூடிய பேருந்து நிறுத்தம் உள்ள நிலையில் சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பேருந்துகளும் இந்த வழியாக செல்கிறது.

இதனால் மாணவர்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து திடீரென வெளியேறி செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக தடுப்பு வேலிகள் கம்பி கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளியின் மேற்கு மற்றும் தெற்கு புறங்களில் சுற்றுசூவர் இல்லாத நிலையில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுவதாக மாணவர்கள் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நாட்களில் பள்ளி வளாகத்திற்குள் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பள்ளியை சுற்றிலும் உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.