2 இடைத்தேர்தலின் தீர்ப்பு குறித்து இன்றைக்கு கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றார்கள் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை, அம்மா தன் உயிரைக் கொடுத்து வளர்த்த இயக்கத்தை, எடப்பாடியார் என்ற சாமானிய தலைவர், இன்றைக்கு மக்களுடைய நம்பிக்கை பெற்ற தலைவராக களத்திலே கடுமையாக மக்களுக்காகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்காக உழைத்து வருகிறார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்.

சவால்களும், சோதனைகளும் உடன்பிறந்த பிள்ளைகளை போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது அதை முறியடித்துதான் மக்களுடைய நம்பிக்கையை பெற்று களத்தில் அதிமுக மக்களுக்காக உழைத்து கொண்டு வருகிறது.
தற்போது ஒரு ஆங்கில நாளிதழில் அதிமுக பதிவான வாக்குகளை நான்கில் ,ஒரு சதவீதம் பெற்றுள்ளது அதிமுகவின் செயல்பாடு மோசமாக இல்லை என கூறியுள்ளது.
அதிமுக கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 37 % வாக்குகளை பெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில்
32.58% வாக்குகளை பெற்றது தற்பொழுது இடைத்தேர்தலில் 25 .61 % வாக்குகளை பெற்றுள்ளது.அதேபோல தாராபுரம் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் 32.37 %வாக்குகளை பெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் 40% சதவீதம் வாக்குகளை பெற்றது. தற்பொழுது 25% வாக்குகளை பெற்றது வாக்கு சதவீதம் என்பது நிரந்தரமல்ல ஏற்றம் இறக்கம் இருக்கும்.
விஜய் ஐந்து நிமிடம் பேசினால் கொத்து பரோட்டா போட்டு விடுவார். ஐந்து நிமிடம் முகத்தை காட்டினால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று கூறினார்கள் .ஆனால் தற்போது இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரத்தை செய்தார் .பொதுக்கூட்டங்கள் ,ரோடு ஷோ, டிராக்டர் ஓட்டுவது, டீக்கடையில் டீ குடிப்பது, மாட்டு வண்டி ஓட்டுவது, முருங்கைக்காய் பறிப்பது என்றெல்லாம் செய்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் கால் தரையில் படவில்லை, ஆனால் தற்போது வீதி,வீதியாக பிரசாரம் செய்தார். களம் நிலவரம் சாதகமாக இல்லை என்று அவருக்கு தெரியும். மக்கள் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நன்றாக தெரியும். அதனால் தான் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து விதிமுறை மீறி பணத்தை செலவழித்தார்கள் .
கடந்த சட்டமன்ற 29 சதவீதம் வாக்குகளை பெற்ற தவெக தற்பொழுது 37% தான் வாக்குகளை பெற முடிந்தது .இன்றைக்கு 63 % வாக்குகள் எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளது .இதன் மூலம் தவெக கட்சியை 63 % மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை .வெற்றிச் சான்றிதழ் பெற்று இருக்கலாம் ஆனால் மக்கள் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இதன் மூலம் தெரிகிறது. குதிரை பேரத்திற்கு தமிழக மக்கள் துணை நிற்க மாட்டார்கள் என்பது தெரிய வருகிறது. 63% மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக தான் உள்ளார்கள் .இரண்டு நாட்கள் விசிலை ஊதினாலும் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் .
கடந்த நான்கு மாதம் கடுமையான மின்வெட்டு, விலைவாசி உயர்வு ,
சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, லாக்அப் மரணங்கள் உள்ளது. தேர்தல் விதிமுறை மீறி தாய் மாமன் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதெல்லாம் தேர்தல் பயத்தில் தொடங்கி வைத்தார். ஆனால் இன்றைக்கு ஜனநாயகம் வலிமை உண்மை புரிந்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களித்து உள்ளார்கள் என்றால் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது அதை தீர்த்து வைப்பவர்கள் என்று தான் மக்கள் வாக்களித்து உள்ளார்கள்.
அதுமட்டுமல்ல இன்றைக்கு காங்கிரஸ், விசிக,மதிமுக, ஐஎம்எல் போன்ற கட்சிகள் கூட்டணியில் இருந்தும் அமைச்சர்கள் படைகள் இருந்தும் விஜய் இரண்டு நாள் பிரச்சாரம் செய்தும் 37% வாக்குகளை தான் தவெக பெற முடிந்தது.
இதே எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தல் வந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வசம் இருந்ததை அதிமுக பெற்றது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் இருந்தது அதை அதிமுக பெற்றது அதேபோல 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் போது,9 தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடியார்.
இன்றைக்கு சில பேர் தவெகவில் இணைந்துள்ளார்கள் அவர்கள் தனி மனிதன் தனி அடையாளத்துடன் சேரவில்லை. அதிமுக என்ற அடையாளத்தில் தான் சேர்ந்துள்ளார்கள் தற்போது இடைத்தேர்தலில் அதிமுகவில் வெற்றி பெற்றவர்களுக்கு தான் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. தவெகவில் தோற்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை .இன்றைக்கு தவெகவில் சென்றவர்கள் அதிமுகவில் சம்பாதித்து அதிமுகவை சிதைக்க நினைக்கிறார்கள் அவதூறு பிரச்சாரத்தையும் பரப்புகிறார்கள்.

தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள் அதிமுக மீண்டும் எழும் இப்படியே இருக்காது. அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்களுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படும் .வெற்றி தோல்வி என்பது அதிமுகவிற்கு சகஜம். தற்போது இந்த தேர்தலில் பொதுவுடைமை இயக்கங்களை சேர்ந்தவர்கள் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார்கள் இதனால் அந்த இயக்கம் இல்லாமல் போய்விடுமா ?
புரட்சித்தலைவி அம்மா இருக்கும்பொழுது பென்னாகரம் இடை தேர்தலில் டெபாசிட் இழந்தோம். அதனை தொடர்ந்து 2011தேர்தலில் ஆளும் கட்சியாக வந்தோம் திமுக எதிர்கட்சியாக கூட வர முடியவில்லை .
புரட்சித்தலைவி அம்மா 40 சகவீதம் வாக்குகளை பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரத்தில் 40% வாக்குகளை பெற்றோம். நிச்சயம் அதிமுக 42 சகவீத வாக்குகள் உயரும் அதற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் .
தோல்வி என்பது இயற்கை நியதி மேலே உள்ளவர்கள் கீழே வரலாம், கீழே உள்ளவர்கள் மேலே வரலாம் இதுதான் வரலாறு .துரோகிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள் என கூறினார்.



