• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் புயல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை மின்தடையால் ரயில் பயணிகள் கடும் அவதி..,

ByKalamegam Viswanathan

Oct 10, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது இதில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மின்தடை ஏற்பட்டது.

சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் ரயில் நிலையத்திலும் மின்தடை ஏற்பட்டதால் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக மின்தடை காரணமாக பிளாட்பாரங்களில் இருட்டாக காணப்பட்டது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அச்சத்துடன் இருந்தனர்.

மழை பெய்த நேரத்தில் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்லக்கூடிய முக்கிய ரயில்களான தாம்பரம் குருவாயூர் மற்றும் கோவை மதுரை மற்றும் மதுரை திண்டுக்கல் பேஸஞ்சர் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் வந்து சென்றது. இந்த ரயில்களில் இருந்து ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கி பிளாட்பாரத்தில் வந்து வெளியே செல்வதில் மின்தடை காரணமாக கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். ரயில் நிலையம் பேருந்து நிலையம் போன்ற அத்தியாவசிய இடங்களில் மின்தடை ஏற்படாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால் இதுபோன்ற நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்றும் பொதுமக்கள் பயணிகள் அச்சத்துடன் கூறி சென்றனர். ஆகையால் இனி வரும் காலங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.