ரோட்டரி கிளப் ஆஃப் திருவில்லிபுத்தூர் டவுண் & விருதுநகர் மாவட்ட அமேச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்திய 20 வயதிற்கு உட்பட்ட மாவட்ட அணியினர்களுக்கு பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் மாநில போட்டிக்கு போகும் அணியினர்களுக்கு பாராட்டு விழா பெரும்மாள்பட்டி நாடார் உறவின் முறை தலைவர் &நிர்வாஸ்தர்கள் தலைமையில் மாவட்ட அமேச்சூர் கபாடி கழகம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

டவுண் சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் முத்து ராமலிங்குமார் குமார் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மைரோட்டரி மாவட்டம் 3212 வின் (29_30) ஆண்டின் ஆளுநர் மயில் T.பாலசுப்பிரமணியம் விருந்தினராக கலந்து3212 கொண்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் வீரர்களுக்கு தேவையா உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியில் டவுண் சங்கத்தின் உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம் சிவக்குமார் ஜெயராஜ் சின்னதம்பி செல்வகுமார் முத்து வேல்ராஜா கார்த்திக்தீபன்& பயிற்சியாளர்கள் மாடசாமி முத்து ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் சரவணக்குமார் நன்றி உரையாற்றினார்.





