• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..,

ByK Kaliraj

Oct 8, 2026

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெம்பக்கோட்டை அணையை நீர்வளத்துறை சென்னை தலைமை பொறியாளர் தங்கராஜ், கண்காணிப்பு பொறியாளர் அன்பு செல்வன், செயற் பொறியாளர்கள் மலர்விழி ,சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அணையின் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் பற்றி விவரம் கேட்டறிந்தனர். அணையில் தற்போது உள்ள நான்கு அடி நீர்மட்டத்தை பார்வையிட்டனர். அணையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவது குறித்து கேட்டறிந்தனர். அதிகாரிகளிடம் அணையில் உள்ள ஐந்து மதகுகளில் நான்கு மதகுகள் பணிகள் முடிவடைந்து உள்ளன.ஆனால் ஐந்தாவது மதகு பராமரிப்பின் போது இணைக்கப்பட்ட கயிறு கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு திடீரென அறுந்து விழுந்தது.

இதனால் மற்ற பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளதாக தெரிவித்தனர். மதகுவுடன் இருந்த கயிறு அறுந்த பகுதியை ஆய்வு செய்து புதிய கயிருக்கான மதிப்பீடு தயார் செய்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.