தலித் விடுதலை இயக்க மாநில தலை வர் ச.கருப்பையா தமிழக முதல்வரு க்கு அனுப்பியுள்ள ஒர் கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் கிராமப்புற மாணவர் களின் ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 20.07.2018-ஆம் ஆண்டில் அரசா ணை (நிலை) எண் 148-ன் தமிழக அரசின் உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் என சுமார் 8254 பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளிகளில் பயிலுகின்ற 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் தல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற ஆங்கில வழி மாணவர்களுக்கு ஆண்டு கற்பிப் பு கட்டணமாக தலா 200 ரூபாயும் 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை படிக்கின்ற ஆங்கில வழி மாணவர்களுக் கு ஆண்டு கற்பிப்பு கட்டணமாக தலா 250-ம், 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில வழியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டிற்கு கல்வி கட்டணமாக நெறிமுறைகள் வகுக்கப்பட்டு பற்றி அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஒவ்வொரு தனியார் பள்ளியும் தங்கள் பள்ளியில் படிக்கக்கூடிய ஆங்கில வழி கல்வி பிரிவுக்கு கட்டாயப்படுத்தி மாணவர் களிடம் ஆண்டிற்கு தலா 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை கல்வி கட்டண மாக தமிழகம் முழுவதும் உள்ள தனி யார் பள்ளிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டார கல்வி அலுவலகத்தின் வட்டார கல்வி அலுவலர் 1 மற்றும் 2 ஆகியோரின் சார்பாக கடந்த 03.07.2026 அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து கல்வி கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் இயங்கக்கூடிய சுமார் 8254 தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங் ஆங்கில வழி பாடத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் கல்வி கட்டணம் கட்டாயப்படுத்தி மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
எனவே, தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு உடனடியாக விசாரணை நடத்தி கட்டாயப்படுத்தி கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதனை தடுத்து நிறுத்தி, அங்கீகாரங்களை ரத்து செய்திட உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.





