• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரையில் முதலமைச்சருக்காக போடப்பட்ட சாலைகள் சேதாரம் ஆகியுள்ளது ஆர்.பி. உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Oct 8, 2026

மதுரை உள்பட தமிழகம் எங்கும் தூய்மைப் பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்திய வருகிறார்கள். வீடுகளில் தேங்கும் குப்பையால் மக்கள் கடும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். கடும் சுகாதார சீர்கேட்டால் மதுரை மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது கேட்க அமைச்சரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் காணவில்லை.

மதுரையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் சென்னையில் செட்டில் ஆகிவிடுகிறார். இரண்டு அமைச்சர்களும் மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கான நேரத்தை செலவிடுவதற்கு மதுரை மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

மதுரையில் தூய்மை பணியாளர்கள் 2400 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தில் தனியார் பங்களிப்பை கைவிட்டு, பணிகளை மதுரை மாநகராட்சி மேற்கொள்ள வலியுறுத்தி அக்டோபர் 5ஆம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அன்று முதல் தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர். இதனால் நகரெங்கும் குப்பைகள் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

தூய்மை பணியாளர்கள் வீடு ,வீடாக சென்று குப்பைகளை சேகரிக்க இல்லாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் குப்பைகளை மூட்டை கட்டி சாலைகள் தெருக்களில் வீசி செல்லுவதால் மாநகரெங்க்கும் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடைக்கிறது மாநகரமே துர்நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது

மதுரை மாநகராட்சியில் இருந்து அவர் லேண்ட் நிறுவனத்தை வெளியேற்றுவது, தீபாவளி போனஸ், பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஆணையராக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது இதனால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் மூன்று நாட்களாக பணிக்கு செல்லவில்லை .

குப்பை வரி , சொத்துவரி பாதாள சாக்கடை வரி அனைத்து வரிகளையும் பொதுமக்களிடத்தில் வசூலித்து விட்டு அதற்காக அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ,தமிழக அரசு செய்து கொடுக்காமல் அலட்சியம் காணப்படுவதாக மக்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்

ஏற்கனவே மதுரை மாநகராட்சியிலே 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழலில் மேயர் ராஜினாமா ,மண்டல தலைவர் ராஜினாமா ,இதுவரை மேயர் இல்லாமல் துணைமேமர் பொறுப்பு மேயராக இருக்கிறார் நிதி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ததாக தெரியவில்லை.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் துவங்குவதற்கும், புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூயத்தை திறந்து வைக்க வருகை தந்த முதல்வர் விஜய்க்கு, மதுரை நிலைமை மறைப்பதற்காக ஆங்காங்கே அவசரகதியில் போடப்பட்ட சாலைகள் இப்போது சேதாரமாக வருகிறது .

இப்போது வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி இருக்கிறது .ஆகவே மதுரைக்கு சிறப்பு கவனம் செலுத்தி, சிறப்பு நிதி கொடுத்து, சிறப்பு அந்தஸ்து கொடுப்பார்கள் என எதிர்பார்த்து 8 தொகுதிகளை தவெகவிற்கு கொடுத்த மக்களுக்கு ஏமாற்றமே இந்த ஐந்து மாதத்தில் பரிசாக கிடைத்துள்ளது .

சிறப்பு நிதியின் இல்லை சிறப்பு கவனம் இல்லை ,காணொளி சிறப்பு அந்தஸ்து இல்லை .இருக்கிற மதுரை மாநகராட்சி அந்தஸ்து கோவில் மாநகரம் குப்பை மாநகரமாக காட்சியளிக்கிறது .

இதுதான் 8 தொகுதிகளுக்கு தவெகவிற்கு பரிசாக கொடுத்த மக்களுக்கு தவெக அரசு குப்பையை பரிசாக கொடுத்துள்ளது .குப்பையை பரிசாக கொடுத்த இந்த தவெக அரசுக்கு பாடம் புகட்டி நாளை இடைத்தேர்தலில் வருகின்ற தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும் என கூறினார்.