தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தமிழ்நாடு வெற்றி திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி குக்கிராமங்கள் தோறும் பல்வேறு அடிப்படை தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை புள்ளி
விபரமாக கணக்கெடுத்து அதை அலுவலக குறிப்பில் ஏற்றி அதை மட்டுமே வரும் 5 ஆண்டுகளில் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி முகாம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு வெற்றி திட்டத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீடு குறித்து வட்டார அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சாந்தி தலைமை ஏற்று பேசினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் முன்னிலை வகித்து பேசினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி மன்ற செயலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு குக்கிராமங்கள் வாரியாக சென்று அப்பகுதி மக்களுக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் வாய்க்கால், பொது கழிப்பறை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து முறையாக கணக்கெடுத்தவுடன், அதனடிப்படையில் தான் வரும் காலங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டு அதற்குண்டான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.




