விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்தது மேல கோதை ஒரு உணவு தேடி வழி தவறி வந்த மானை தெருநாய்கள் கடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் நாய்களிடம் இருந்து மானை பத்திரமாக மீட்டனர். காயம் அடைந்த மான் குறித்து சிவகாசி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் வனச்சரக அலுவலர் பூவேந்தன் தலைமையில் பரிசோதனை செய்ததில் மான் இறந்தது விட்டதாக தெரிவித்தனர்.தொடர்ந்து தாயில்பட்டி கால்நடை மருத்துவ அலுவலர் கண்ணன் இறந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அருகிலேயே அடக்கம் செய்தனர்.





