• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் ஊராட்சி பண்ணைக்குளம் நாராயணபுரம் என்ற ஊரில் மத்திய அரசின் சார்பில்
தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ 3 கோடி மதிப்பீட்டில் வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீரையும் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தகரிப்பு செய்து உரம் தயாரிக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்குண்டான பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது.

இந்த திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாயத்திற்கும் விவசாய நிலங்களுக்கும், மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்து என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இனறு திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சாந்தி, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், தூய்மை பாரத இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாநிதி ஆகியோர் நாராயணபுரத்துக்கு வந்து இத்திட்டத்தை நிறைவேறினால் கிராம மக்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தனர்.

அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சவடமுத்து, ராகேஷ்,மாரிமுத்து, மூத்த நிர்வாகி கோவிலூர் மற்றும் விவசாயிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.