கோவையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெறும் விண்வெளி கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் இஸ்ரோ இஸ்ரோ திருவனந்தபுரம் முன்னாள் இயக்குனர் ஹுட்டன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுவரும் இந்த மாபெறும் கண்காட்சியில் இஸ்ரோ திருவனந்தபுரம் எல்.பி.எஸ்.இ முன்னாள் இயக்குனர் ஆர்.ஹுட்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த கண்காட்சியில் PSLV C35, ராக்கெட், GSLV F05, ராக்கெட்,
GSLV MK III ராக்கெட்டுகளின் மாதிரி வடிவங்களும், மேலும் ராக்கெட்டுகளின் இஞ்சின்களும், ராக்கெட்டின் உதிரி பாகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றதுடன் கண்காட்சியை பார்க்க வந்த அரசு, மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட்டுகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.

கண்காட்சியை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள் இதுபோன்ற கண்காட்சிகள் எங்ககுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இதுவரை பார்க்காததை நேரில் பார்க்க முடிந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், புதுவித அனுபவத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் விண்ன்வெளி வீரர்களின் உடைகளின் மாதிரிகளை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். வின்வெளி குறித்து படித்து வரும் மாணவர்களுக்கு விண்ன்வெளிகுறித்தும், ராக்கெட்டுகளின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹட்டன் கூறியதாவது.. அறிவியலதுறையில் இந்தியா அடைந்து வரும் இந்தப் பாய்ச்சல், உலக அரங்கில் நாட்டின் பெருமையை மேலும் உயர்த்தும், எதிர்காலத் திட்டங்கள், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன் மற்றும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் தெரிவித்தார். மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 12,000 மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், தெரிவித்தார்

மேலும் விண்வெளித் துறையில் இந்தியாவின் முக்கிய இலக்குகள் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான 95% சோதனைப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மனிதர்களை அனுப்பும் முன், பாதுகாப்பு காரணங்களுக்காக 3 ஆளில்லா விண்கலங்கள் விண்ணில் ஏவப்படும். இதில் முதல் ஆளில்லா விண்கலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏவப்பட வாய்ப்புள்ளது என்றார்.




