• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அக்டோபர் 10-ல் ராகுல் காந்தியுடன் மாணவர் சந்திப்பு!

ByK Kaliraj

Oct 5, 2026

வருகின்ற அக்டோபர் 10-ம் தேதி சென்னையில், ராகுல் காந்தி அவர்களின் “Chatron Ki Goonj” (மாணவர்களின் குரல்) என்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை QR Code மூலம் பதிவு செய்யும் பணி விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ராகுல் காந்தி அவர்களின் QR Code உடன் கூடிய பிளக்ஸ் போர்டு வைத்து மாணவர்களை பங்கேற்க வைக்க மாவட்ட தலைவர் ராஜ்மோகன் ஆலோசனையின் பேரில்

சிவகாசி பி. எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி

சாத்தூர் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளிடம் ராகுல் காந்தி வருகை குறித்து விளக்கி கூறப்பட்டது.

வெம்பக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு வட்டாரத் தலைவர் செல்வக்கனி வெம்பக்கோட்டை ஒருங்கிணைந்த ஒன்றிய தலைவர் சுப்புராம், முன்னாள் வட்டார தலைவர் கிருஷ்ணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன்,
பால்பாண்டி, முருகன் உள்பட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.