• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பேரூராட்சியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 5, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டுமென கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தே வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அவர்கள் கூறியது: நாங்கள் குறைந்த ஊதியத்திலேயே வேலை செய்து வருகிறோம் எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்க வேண்டும். அவர்களுக்கு போதுமான கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். காலை உணவுக்கு பதிலாக அதனை பணமாக வழங்க வேண்டும் என கூறினர்.

காலை ஆறு மணி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் அரசு உடனடியாக தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்