• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சமயநல்லூர் அரசு மருத்துவமனையில் முத்தூட் இரத்த சேமிப்பு மையம் திறப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Oct 5, 2026

மதுரை சமயநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் ரத்த சேமிப்பு மையத்தை மதுரை மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டி திறந்து வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை சமயநல்லூரில் உள்ள வட்டார அரசு மருத்துவமனையில் முத்தூட் இரத்த சேமிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது திறப்பு விழாவை தொடர்ந்து இரத்த சேமிப்பு மையத்திற்கு உள்ளடங்கிய மருத்துவமனைக்கு தேவையான சுமார் 5.5லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதன்மூலம் கர்ப்பிணிகள், குழந்தைகள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள். பயன்பெறுவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமயநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் பத்மாவதி, உதவி மருத்துவர் கௌதம், சமூகப்பொறுப்பு தென்மண்டல மேலாளர் ஜெயக்குமார், முத்தூட் ஃபைனான்ஸ் மதுரை மண்டல மேலாளர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் நாகேந்திரன், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.