மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கு பாத்தியப்பட்ட வாசிமலையான் கோவில் பொட்டல்பட்டி கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது.,

இந்த நிலையில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உத்தப்புரம் கிராமத்திலிருந்து ஒரு தரப்பினர் சாமி தரிசனம் செய்ததற்காக பூஜை பொருட்களுடன் மாற்று சமூகத்தினர் வழிபடும் உத்தப்புரம் முத்தலம்மன் கோவில் முன்பு உள்ள அரச மரத்தை சுற்றி வர ஐந்து நபர்களுக்கு அனுமதித்து சுற்றி வந்த பின்பு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாசிமலையான் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கிராமத்திற்கு வந்தனர்.,

இதனால் இந்த கிராமத்தில் கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக டிஐசி அபினவ்குமார் மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி தேவனாதன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் அரசமரத்தை சுற்றியும் மற்றும் உத்தப்புரத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.,
இதனால் உத்தப்புரத்தில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,




