• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஜப்பானிய இகெபானா பாணியில் நவராத்திரி கொலு”..,

BySeenu

Oct 2, 2026

​ நவராத்திரி திருவிழாவை முன்னிட்டுத் பாரம்பரியக் கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலாச்சார நினைவுகளை ஒன்றிணைக்கும் ‘சங்கல்பம்’ பண்பாட்டுக் கண்காட்சி கோவை லக்ஷ்மி மில்ஸ் நகர்ப்புற மையத்தில் (Lakshmi Mills Urban Centre) இன்று சிறப்பாகத் தொடங்கியது.

​தெய்வீகப் பெண்மை மற்றும் பாரம்பரியத்தின் சங்கமம்:

தெய்வீகப் பெண்மையின் சக்தி, படைப்பாற்றல் மற்றும் மீள்திறனைக் கொண்டாடும் வகையில் இக்கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ண பரிஜாதாவின் விஜயலட்சுமி ருத்ரப்பன், ஹல்தி குங்குமத்தின் அபிஷேக் எஸ். மூர்த்தி, ஆரா டிசைனின் அபர்ணா வெங்கடேஷ் மற்றும் சரண்யா கோகினேனி ஆகியோரின் கூட்டுப் பங்களிப்பில் இக்கண்காட்சி கருத்தாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

​தென்னிந்திய பாரம்பரிய சடங்குகள், மலர்க் கலைகள், கைத்தறி நெசவு, பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியின் முதன்மை அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

​ஜப்பான் ‘இகெபானா’ பாணியில் புதுமையான கொலு:

நவராத்திரி கொலுவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜப்பான் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற ஓக்கா மீனாட்சி தேவி மற்றும் அவரது குழுவினர் சிறப்புப் பங்காற்றிய உள்ளனர்.

​ஜப்பானிய பாரம்பரிய மலர் அலங்கார முறையான ‘இகெபானா’ (Ikebana) நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீனக் கலாச்சாரமும் நமது தென்னிந்திய மரபும் இணையும் வகையில் இக்கொலு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மூங்கில்கள், இயற்கைச் செடிகள், பூக்கள் மற்றும் சாமி சிலைகளுக்கான பிரத்யேக மாலை அலங்காரங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன.

​கைவினைஞர்களின் வாழ்வாதாரம் காக்க முயற்சி:

இக்கண்காட்சி குறித்து அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்:

​”நமது முன்னோர்களின் மாபெரும் கட்டிடக் கலை மற்றும் பாரம்பரியக் கொலு பொம்மை செய்யும் கைவினைஞர்களின் எண்ணிக்கை தற்காலத்தில் குறைந்து வருகிறது. வருமானக் குறைவு காரணமாக அடுத்த தலைமுறையினர் வேறு தொழில்களுக்குச் சென்று விடுகின்றனர்.
​

நமது பாரம்பரியக் கைவினைப் பொருட்களுக்கு உலகளாவிய தேவையை உருவாக்கி, அலைந்து திரியும் அந்தப் பாரம்பரியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். வீடுகளைப் புதிய முறையில் அழகுபடுத்த நினைப்பவர்களுக்கு இக்கண்காட்சி மிகச் சிறந்த யோசனைகளை வழங்கும்,” எனத் தெரிவித்தனர்.

​இன்றும் நாளையும் அனுமதி எனவும்

அக்டோபர் 2 மற்றும் 3 (இன்றும் நாளையும்) ஆகிய இரு தினங்கள் மட்டும் நடைபெறும் இக்கண்காட்சிக்குக் கோவை பொதுமக்கள் திரளாக வருகை தந்து, பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இணைந்த இந்த தெய்வீகக் கலை அனுபவத்தைப் பெற்றுச் செல்லுமாறு அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்து உள்ளனர்.

இந்த நிகழ்வை சங்கல்பத்தை, கிருஷ்ண பரிஜாதாவின் விஜயலட்சுமி ருத்ரப்பன், ஹல்தி குங்குமத்தின் அபிஷேக் எஸ். மூர்த்தி, ஆரா டிசைனின் அபர்ணா வெங்கடேஷ் மற்றும் சரண்யா கோகினேனி ஆகியோர் கருத்தாக்கம் செய்துள்ளனர்.

இவர்களது கூட்டுப் படைப்பு, தென்னிந்திய மரபு, சடங்குகள், மலர்க் கலை, இந்தியக் கைவினை மற்றும் சமகால வடிவமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது