தர்மம் செய்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
மதுரை சிம்மக்கல் அடுத்த அனுமார் படித்துறை பகுதியில் இயங்கி வரும் இந்து மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் முதியோர் இல்லத்திற்கு வருகை புரிந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பார்வையிட்டு முதியோர்கள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். சுவாமிகளுக்கு சுரேஷ் சாஸ்திரிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு வைக்கப்ப்ட்டிருந்த பிள்ளையாருக்கு தீபாராதனை செய்து வழிப்பட்ட பின்னர் பேசியதாவது.
மஹாளய அமாவாசை அன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய குளங்கள் ஆற்றங்கரைகள் இவைகளை பொதுமக்களும் அரசாங்கத்தின் உதவியுடன் தூய்மையாக வைத்துக் கொண்டு அன்றைக்கு ஏழை எளிய மக்கள் அனைவரும் அவர்களுடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி போன்றவற்றை அளித்து வருகிறார்கள்.
அதற்கு ஏற்றார் போல அதனை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் காசியில் கோவில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. பீகார் காயாவிலும் முன்னோர்களுக்கான பித்ருபூஜனம் சிறப்பாக அமாவாசை போன்ற நாட்களில் செய்து வருகிறார்கள்.
அங்கும் வளர்ச்சி பணிகளை செய்து அதன் மூலம் குடும்பத்தில் இருக்க வேண்டிய சரியான பாசம் ஒற்றுமை அதன் மூலம் குடும்பத்துடைய தர்மங்களை அனைத்து மக்களும் வழிவழியாக செய்து வரக்கூடிய அக்கறை வளரும்.
நம் நாட்டில் கோவில், கிராமங்கள், குடும்பம் என்பது முக்கியம், ஆகவே குடும்பத்தினுடைய ஒற்றுமை கிராமத்தின் ஒற்றுமை கோவில்களுடைய நல்ல நிர்வாகம் இவைகள் மூலமாக பூஜைகள் ,அன்னதானம் ,கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தி ஒவ்வொரு கோவில்களும் திருப்பதி போன்று சிறப்பாக நடைபெறுவதற்கு மக்கள் முயற்சிக்க வேண்டும்
மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது 1963 ஆம் ஆண்டு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளும் ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் நடத்தினார்கள் 1995 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவினை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிருந்து நடத்தினார்கள் அவர்களோடு நான் கூட வந்து கலந்து கொண்டோம்.
தற்போது இந்த கும்பாபிஷேக மண்டலபூஜை விழாவை ஒட்டி காஞ்சிபுரத்தில் சாதுர் மாஸ்ய விரதம் நடைபெற்றதினால் அதை முடித்துக் கொண்டு இங்கு முதல் நிகழ்ச்சியாக மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் சுந்தரேஸ்வர சுவாமிக்கு விசேஷமான மண்டல அபிஷேகங்களும் நடைபெற்றன. இதில் பங்கு பெற்று அறுபடை வீடுகளில் தரிசனங்களை முடித்து மீனாட்சி அம்மனுடைய ஊருக்கு வந்து தரிசனம் செய்துகொண்டு காஞ்சிபுரத்திற்கு செல்கிறோம்
ஆகவே நம்முடைய நாட்டில் கலாச்சாரமும் தர்மமும் சேவையும் முக்கியமானது பொதுமக்களும் செல்வந்தர்களும் அரசாங்கமும் அனைவரும் இணைந்து தர்மத்தின் வழியாக பொதுமக்களுக்கு நன்மை செய்து அறத்தை செய்தால் நம்மை அறம் பாதுகாக்கும் .

இந்த வாழ்க்கை என்பது இறைவனுடைய அருளால் நமக்கு கிடைத்திருக்கிறது. இதனை சரியாக நாம் உபயோகப்படுத்திக் கொண்டு அர்த்தமுள்ள விதத்தில் செயல்பட வேண்டும்.
நாம் சந்தித்துக் கொண்டிருக்கிற சவால்களும் நிறைய இருக்கின்றன
ஆகவே இளைஞர்கள் அவர்கள் உடல் உழைப்பு மற்றும் கல்வியாக இருக்கட்டும் நல்ல உணவு நல்ல உணர்வு நல்ல உடை இது போன்ற அனைத்து விதத்திலும் அவர்கள் பாசிட்டிவ் சிந்தனையில் நல்லவிதமாக யோசித்து செய்ய வேண்டும்,
இந்தியா என்பது வளர்ந்து வரக்கூடிய நாடாக இருக்கிறது மேலும் வளர்வதற்கான தேவையும் வளர்வதான வாய்ப்புகளும் உள்ளன
பெரும் எண்ணிக்கையில் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள்
நல்ல சிந்தனையோடு நம்முடைய நாடு இதுவரை முன்னேறி இருக்கிறது என்றால் கடினமான உழைப்பும் எளிமையான வாழ்க்கையும் முதியோர்களையும் மதித்தலும் முன்னோர்கள் செய்ததில் நல்லதை நாம் பின்பற்றி அறப்பணிகளை தண்ணீர் பந்தல், அன்ன அன்னதானம், மரங்களை நடுவதாக இருக்கட்டும்,அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்புடன் பழகி அன்பே சிவம் என்கிற தத்துவத்தை நாம் பின்பற்றி வருகிறோம்
இளைஞர்கள் சக்தி இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது .அதனை நல்ல முறையில் நீங்கள் பின்பற்றி சிறப்பாக உழைத்து சிக்கனமாக வாழ்ந்து சேவையை செய்து சிக்கனம் சேமிப்பு சேவை என்கிற விதத்தில் நல்ல பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து அனைவருக்கும் உதவிகரமாக இருக்க வேண்டும்
இவ்வாறு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார் நிகழ்வில் மதுரை இந்து மிஷன் ஆஸ்பத்திரி செயலாளர் டாக்டர் டி ராமசுப்பிரமணியன் , மேலாளர் மூர்த்தி, அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, சுரேஷ் சாஸ்திரி, சமூக ஆர்வலர் இல. அமுதன், டாக்டர் விஜயராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்




