• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கதம்ப வண்டுகள் தாக்கிய சம்பவம்..,

ByP.Thangapandi

Oct 1, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொண்டிக்குண்டு கிராமத்தில் அடுத்த வாரம் புரட்டாசி மாதம் நடைபெறும் மந்தையம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது.,

இந்த நிலையில் திருவிழாவிற்கு முன்பாக கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயிலில் இன்று மாலையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.,

கிராமத்தில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது., இதனால் ஏற்பட்ட புகையினால் அந்தப் பகுதியில் இருந்த கதம்ப வண்டுகள் கூட்டை விட்டு வெளியேறி அங்கு இருந்தவர்களை விரட்டி கொட்ட ஆரம்பித்தது.,

இதில் 25 பேருக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்தனர்.,

தகவல் அறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்., இதில் 25 க்கும் மேற்பட்டோர் முதலுதவி பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.,

இதில் பலத்த காயமடைந்த பெருமாள் 42, கருப்பன் 40, சக்கரையம்மாள் 55, அஸ்வினி 20 ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.,

இச்சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கதம்ப வண்டுகள் தாக்கிய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.,