மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அலங்காநல்லூர் பகுதியில்கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கிதொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்லாட்சியில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக ஏராளமான நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார். பெண்கள் வீட்டின் கண்கள் என்ற பொன்மொழிக்கு ஏற்ப மகளிர் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குறிப்பாக மீனாட்சி அரசாட்சி செய்யும் மாமதுரையில் தாய் மாமனுக்கு தனித்துவம் கொண்ட முது மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.

இதனால் புது எழுச்சி உருவாகியுள்ளது. தற்போது எதிர்கால வரலாற்றை இவ் வுலகிற்கு தர இருக்கும் சகோதரி களின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.பெண்கள் குழந்தை களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாக இருந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா, கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன்,ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.





