சோழவந்தானில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பிருந்தாவன் மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக காலை எட்டு மணி முதல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மண்டபத்திற்கு வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து கர்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வைபவம் நடைபெற்றது. இதில் கர்பிணி பெண்களுக்கான பல்வேறு வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் 100க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போதிய இடவசதி இல்லாமல் சிரமப்பட்டதாக வளைகாப்பில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கூறிச் சென்றனர்.





