• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 1, 2026

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மதுரை மண்டலத்தில் முதற்கட்டமாக திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களை ஒருங்கிணைத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் வைத்து நடைபெற்றது.

மதுரை மண்டல தலைவர் திரு. இராஜ்குமார் திரு.அந்தோனிராஜ் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைமையிலும் மாநில பொதுச் செயலாளர் மு.இருளாண்டி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.மற்றும்
8 மணி நேரம் வேலை தீபாவளி போனஸ் 8.33% மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் மற்றும் 2022 மற்றும் 2023 ஆண்டு 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் .மற்றும் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 5 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் அக்டோபர் 14 மதுரையில் பட்டினி போராட்டம் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறவிட்டால் நவம்பர் 3 வேலை நிறுத்த போராட்டத்திற்கான ஆயத்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி விருதுநகர் மாவட்டம் நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.. மாநில அமைப்பு செயலாளர் திரு.நல்லமுத்துசாமி மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் திரு.மகேஸ்வரன் திருநெல்வேலி மாவட்ட தலைவர் திரு.கல்யாணி நன்றி உரை ஆற்றினார்கள்.