ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி தேனி மாவட்டத்தில் உள்ள 98 மலை கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருஷநாடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் கடமலைக்குண்டு பேருந்து நிலையம் பகுதியில் இன்று நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை இருந்து வருசநாடு – மேகமலை 98 மலைகிராம மக்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக இளைஞர் குழுவினர் உசிலம்பட்டியிலிருந்து கடமலைக்குண்டு வரை சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் இருசக்கர வாகனப் பேரணி செல்ல இருந்த சூழலில்.,

உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய் கணேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகே இருசக்கர வாகன பேரணிக்கு செல்ல முற்பட்ட இளைஞர் குழுவினரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

மேலும் காவல்துறை சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் கூட்டமாகச் செல்ல அனுமதி மறுத்ததால் இளைஞர்கள் அவர்களது சொந்த நான்கு சக்கர வாகனத்தில் சென்றனர்.,




