• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் வருகை..,

ByKalamegam Viswanathan

Sep 29, 2026

காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் உள்ள மடத்திற்கு வருகை புரிந்தார் அவருக்கு கிராமத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையொட்டி அங்குள்ள கல்வெட்டை திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில். மீனாட்சி அம்மனை தரிசிக்க மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ள விஜயேந்திர சரஸ்வதி சாமிகள். முதல் நிகழ்ச்சியாக சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்திற்கு வருகை புரிந்தார். இவருக்கு மடத்தின் கிளை சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் கோவிலில் தரிசனம் செய்தார். இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த விஜேந்திரர் சாமிக்கு கோவில் சார்பில் அங்குள்ள அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் பூர்ண கும்பம் மரியாதை செய்து வரவேற்றனர். தொடர்ந்து இப்பகுதியில் உள்ள பெண்கள் தீபம் ஏற்றி சுவாமியை வரவேற்றனர். வழி நெடுக வீட்டின் முன்பு பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி இவருக்கு பழங்கள் வழங்கி வரவேற்றனர். அனைவருக்கும் ஆசி வழங்கி பிரசாதம் மற்றும் பழங்கள் வழங்கினார். இந்த கிராமத்தில் பிறந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியசுவாமி தனது வீட்டை காஞ்சி மடத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இவரது இல்லத்தில் செயல்படும் காஞ்சி மடத்தின் கிளையின் கல்வெட்டை திறந்து வைத்து விளக்கேற்றி வைத்து மகா பெரியவரின் படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.இங்குள்ள கோ சாலையை பார்த்தவர் அங்குள்ள நாட்டு மாடுகளுக்கு பழங்கள் வழங்கினார்.

அங்கு செயல்படும் மாலை நேர கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் கிராமத்தினருக்கு ஆசி வழங்கினார். இரவு சமயநல்லூர் அருகில் உள்ள தேனூர் சுப்ரஜா வளாகத்தில் தங்கிய காஞ்சி காமகோடி மடாதிபதி விஜயேந்திர சாமிகள் தொடர்ந்து. மூன்று நாள் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.