• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

“தோட்டங்களில் உலா வரும் ஒற்றை யானை!”

BySeenu

Sep 29, 2026

கோவை, பூண்டி மற்றும் ஈஷா யோகா மையத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவிற்காகத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் கம்பீரமாக உலா வரும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான பூண்டி, முட்டத்துவயல் மற்றும் ஈஷா யோகா மையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் அண்மைக் காலமாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

​இந்நிலையில், நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று, ஈஷா யோகா மையத்தின் அருகே உள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து உள்ளது. அங்குச் சாவகாசமாக உலா வந்த அந்த யானை, பயிர்களைச் சேதப்படுத்தியும், தென்னை மற்றும் வாழை மரங்களை உண்டு உலா வந்து உள்ளது.

யானை தோட்டத்திற்குள் உலா வரும் இந்தத் த்ரில்லிங் காட்சிகள் அங்கு இருந்த தனியார் தோட்டம் ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் வைரலாகி வருகிறது.

​யானையின் நடமாட்டத்தைக் உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையற்ற முறையில் வெளியே நடமாட வேண்டாம் என்றும், யானையைக் கண்டால் துன்புறுத்தவோ முயலக் கூடாது என்றும் வனத்துறை சார்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.